கோப்புப் படம். 
வணிகம்

விவசாய ஊழியர்களுக்கான சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் குறைவு!

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதம் முறையே 6.36 சதவிகிதம் மற்றும் 6.39 சதவிகிதத்திலிருந்து, அக்டோபர் மாதம் முறையே 5.96 சதவிகிதம் மற்றும் 6 சதவிகிதமாக குறைந்ததாக தகவல் வெளியானது.

DIN

புதுதில்லி: விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் அக்டோபரில் முறையே 5.96 சதவிகிதம் மற்றும் 6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதுவே செப்டம்பரில் 6.36 சதவிகிதமாகவும் மற்றும் 6.39 சதவிகிதமாகவும் இருந்தது.

விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான 2024 அக்டோபரில் 11 மற்றும் 10 புள்ளிகள் அதிகரித்து 1,315 மற்றும் 1,326 புள்ளிகளை எட்டியது என்று தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

இதையும் படிக்க: சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி, மெட்டல் துறை பங்குகள் உயர்வு!

அறிக்கையின்படி, செப்டம்பர் மாதம் விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு முறையே 1,304 புள்ளிகள் மற்றும் 1,316 புள்ளிகளாக இருந்த வேளையில், அக்டோபர் மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான பணவீக்க விகிதம் முறையே 5.96 சதவிகிம் மற்றும் 6.00 சதவிகிதமாக இருந்தது. இது 2023 அக்டோபரில் 7.08 சதவிகிதம் மற்றும் 6.92 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT