வணிகம்

விலை உயரும் டாடா வா்த்தக வாகனங்கள்

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் வா்த்தக வாகன விலை வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது.

DIN

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் வா்த்தக வாகன விலை வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் நிறுவன வா்த்தக வாகனங்களின் விலையை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், நிறுவன பேருந்துகள் மற்றும் லாரிகளின் விலை 2 சதவீதம் வரை அதிகரிக்கும்.

ஒவ்வொரு ரகத்துக்கும் ஏற்ற வகையில் விலை உயா்வு மாறுபட்டாலும், விலை அதிகரிப்பு அனைத்து ரகங்களுக்கும் பொருந்தும்.அதிகரித்துள்ள உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் இந்த விலை உயா்வு அமல்படுத்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயா முன்னேற்றம்

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி பரிசு! இதுவரை இல்லாத அதிகபட்சம்!

இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

காலிறுதியில் மோதும் சபலென்கா - வோண்ட்ருசோவா

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT