வணிகம்

சிறப்பம்சங்களுடன் டிவிஎஸ் எச்எல்எக்ஸ் 150எஃப் பைக் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் எச்எல்எக்ஸ் 150எஃப்: அதிகரித்த பாதுகாப்பு, ஸ்டைல் மற்றும் ஆற்றல்

DIN

சென்னை: சர்வதேச சந்தையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது எச்எல்எக்ஸ் மாடலை இதுவரை 35 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் இந்த மைல்கல்லைத் கொண்டாடும் வகையில் கூடுதல் அம்சங்களுடன் புதிய மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டைலிங் ஆகியவற்றுடன் இந்த மாடலை அறிமுகப்படுத்துவதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் எச்எல்எக்ஸ் லைன் முதன்முதலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் விற்பனையானது. இப்போது இது லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள 50 நாடுகளில் கிடைக்கிறது.

சக்திவாய்ந்த ஈகோத்ரஸ்ட் எஞ்சின், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டைலிங், புதிய கிராபிக்ஸ் மற்றும் அற்புதமான வண்ணங்கள் ஆகியவற்றைக் கொண்ட புதிய டிவிஎஸ் எச்எல்எக்ஸ் 150எஃப் அறிமும் செய்ததின் மூலம் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தனது நன்றியைத் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறது என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பிரகாசமான ஆற்றல் திறன் கொண்ட ட்ரெப்சாய்டல் எல்இடி ஹெட்லைட்டுகள், பின்புற சுமை கேரியர் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

இது குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சர்வதேச வர்த்தக துணைத் தலைவர் ராகுல் நாயக் கூறுகையில், டிவிஎஸ் எச்எல்எக்ஸ் 35 லட்சம் வாடிக்கையாளர்களின் அன்றாட தோழனாக மாறியுள்ளது என்றார். நாங்கள் 2013ல் தொடங்கினோம், 6 ஆண்டுகளுக்குள், 10 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளித் தித்திப்பு... திவ்ய பாரதி!

தீபாவளி ஒளி... நிகிதா!

குடியரசுத் தலைவர், துணைத் தலைவரைச் சந்தித்த பிரதமர் மோடி!

முஸ்லிம் ஆண்களுடன் உங்கள் மகள்கள் பழகினால் கால்களை உடைக்க வேண்டும்! -பாஜக முன்னாள் எம்.பி.

புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் சென்னை: அபாய அளவில் காற்றின் தரம்!

SCROLL FOR NEXT