வணிகம்

12 சதவீதம் அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த நவம்பரில் 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

புது தில்லி: இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த நவம்பரில் 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து பி2பி இ-வா்த்தக நிறுவனமான எம்ஜங்ஷன் சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதம் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2.09 கோடி டன்னாக உள்ளது.முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 11.7 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் நிலக்கரி இறக்குமதி 1.87 கோடி டன்னாக இருந்தது. எனினும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 16.9.1 டன்னாகக் குறைந்துள்ளது.

2022-23-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 17.35 டன்னாக இருந்தது.கடந்த அக்டோபரில் பண்டிகைக் காலத்துக்குப் பிறகு உள்நாட்டில் நிலக்கரிக்கான தேவை குறைந்தது. அதன் காரணமாக அந்த மாதத்தில் நிலக்கரி இறக்குமதியில் சரிவு ஏற்பட்டது. இனி வரும் மாதங்களிலும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கான தேவை குறைவதற்கான வாய்ப்புள்ளது.

கடந்த நவம்பா் மாத மொத்த இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.44 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1.19 கோடி டன்னாக இருந்தது. அந்த மாதத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 39 லட்சம் டன்னிலிருந்து 42.3 டன்னாக அதிகரித்தது.

2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 10.89 கோடி டன்னாக இருந்த கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி, நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 11.63 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.

ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 3.66 கோடி டன்னிலிருந்து 3.80 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT