வணிகம்

மீண்டது பங்குச் சந்தை: நிஃப்டி, சென்செக்ஸ் உயர்வு!

இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் முந்தைய அமர்வு இழப்புகளை சமன் செய்தது.

DIN

இன்றைய வர்த்தகத்தில், பெஞ்ச்மார்க் குறியீடுகள் முந்தைய அமர்வு இழப்புகளை சமன் செய்ததால் ஐடி, ஆட்டோ மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் உயர்ந்தன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 443.46 புள்ளிகள் உயர்ந்து 79,476.19 ஆகவும், தேசிய பங்குச் சந்தை 131.35 புள்ளிகள் உயர்ந்து 24,141.95 ஆக முடிந்தது.

கடந்த வார இறுதி வர்த்தகத்தில் சரிந்த பங்குச் சந்தை, இன்றைய வர்த்தகத்திற்கு பிறகு வலுவடைந்தது. மின்சாரம், பொதுத்துறை வங்கி மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் வாடிக்கையாளர்கள் வாங்கி குவித்ததால் பங்குச் சந்தை மீண்டும் வாழ்நாள் உச்சத்தை நெருங்கியது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மஹிந்திரா, விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்திலும் என்டிபிசி, எய்ச்சர் மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், எஸ்பிஐ, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவிலும் முடிந்தது.

மின்சாரம், ஐடி, பொதுத்துறை வங்கி மற்றும் ரியாலிட்டி துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளும் உயர்ந்து முடிந்தது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

டெக் மஹிந்திரா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஃபின்டெக், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், ஏசிசி, எல் அண்ட் டி ஃபைனான்ஸ், இமாமி, ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ், இந்திரபிரஸ்தா கேஸ், க்ளென்மார்க் பார்மா, பயோகான், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

நிஃப்டி டாப் 50 பங்குகளில், ஜூலை மாதத்துக்கான இன்றைய வர்த்தகம் சற்று குறைவாக தொடங்கியது. ஆனால் ஐடி துறைகளின் ஏற்றத்தால் சென்செக்ஸ் 131.35 புள்ளிகளுடன் 24,141.95 என்ற நிலையில் லாபத்துடன் நிறைவு செய்தது. துறைகளைப் பொருத்தவரை மீடியா பங்குகள் அதிகபட்சமாக லாபம் ஈட்டியது. பொதுத்துறை வங்கி 0.76 சதவிகிதம் இழப்புடன் முடிந்தது.

இன்றைய பகல் நேர வர்த்தகத்தில் சிமென்ட் பங்குகளின் வர்த்தகத்தில் சற்று இழுவை தென்பட்டது. அதே வேளையில் மிட் மற்றும் ஸ்மால்கேப்ஸ் பங்குகள் 0.90 சதவிகிதம் முன்னேறி பெஞ்ச்மார்க் குறியீட்டை விட சிறப்பாக செயல்பட்டன.

தினசரி வர்த்தகத்தில் தொடர் காளை ஆதிக்கம் உள்ளிருக்கையில்‌ பங்குச் சந்தை குறியீடு எண்கள் 24,250 மூதல் 24,400 நோக்கி செல்லும் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT