மாதிரி படம் 
வணிகம்

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் உண்டா? நிதியமைச்சரின் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களின் ஜிபிஎஃப் வட்டி விகிதம் 7.1% - நிதி அமைச்சர் அறிவிப்பு

DIN

ஜூலை- செப்டம்பர் காலாண்டுக்கான மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதர வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1 சதவிகிதமென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஜூலை 3 தேதியிடப்பட்ட சுற்றறிக்கையில் நிதியமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2024-25 நிதியாண்டில் பொது வருங்கால நிதி மற்றும் இதர வருங்கால நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவிகிதமெனவும் ஜூலை 1,2024 முதல் செப். 30,2024 வரையிலான காலக்கட்டத்துக்கு பொருந்துமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்- மத்திய அரசு பணிகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (சிபிஎஃப்- இந்தியா), அனைந்திந்திய பணிகள் வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில் வருங்கால வைப்பு நிதி, பொது வைப்பு நிதி (ஆயுத பணிகள்) மற்றும் இந்திய ஆயுதங்கள் துறை (ஐஓஎஃப்எஸ்) வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் 7.1 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டிலும் இதே வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி விகிதம் முறையே 8.2 சதவிகிதம் மற்றும் 7.7 சதவிகிதம் ஆகியவற்றில் எந்தவித மாற்றத்தையும் இந்த காலாண்டில் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

SCROLL FOR NEXT