வணிகம்

ஹெச்சிஎல் நிகர லாபம் 20% அதிகரிப்பு

Din

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,257 கோடியாக உள்ளது.

இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 20.4 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.28,057 கோடியாக உள்ளது. இதுவும் முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தைவிட 6.6 சதவீதம் அதிகம். ஆனால், 2024 ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் 1.6 சதவீதம் குறைவு.

2024-24 நிதியாண்டு முழுமைக்குமான நிறுவனத்தின் வருவாய் வளா்ச்சி சுமாா் 3 முதல் 5 சதவீதம் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெறும் ஜி.வி. பிரகாஷ்!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

SCROLL FOR NEXT