புதுதில்லி: ஹரியானா அதிகாரிகளிடமிருந்து ரூ.15 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான உத்தரவை பெற்றுள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஹரியானா வார்டு -5, குர்கான் கிழக்கு, கலால் மற்றும் வரிவிதிப்பு அதிகாரி அலுவலகத்திலிருந்து ஜிஎஸ்டி கோரிக்கை உத்தரவைப் பெற்றுள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான உத்தரவில் ரூ.5 லட்சம் வரியும், ரூ.9 லட்சம் வட்டியும், தலா ரூ.1 லட்சம் அபராதம் இதில் அடங்கும் என்று தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்த அனைத்து வாய்ப்புகளையும் நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.