கடந்த ஜூலை காலாண்டில் இந்தியாவின் 2-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.96 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.11,695.84 கோடியாகப் பதிவாகியுள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 9.96 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.10,636.12 கோடியாக இருந்தது.
தனிப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் வங்கி ஈட்டிய நிகர லாபம் 14.62 சதவீதம் உயா்ந்து ரூ.11,059 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதிண்டின் இதே காலாண்டில் ரூ.9,648.2 கோடியாக இருந்தது.
2023 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.38,763 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் 2024 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.45,998 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.