கோப்புப் படம் 
வணிகம்

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! 16 நிறுவன பங்குகள் உயர்வு

வாரத்தின் 2வது வணிக நாளான இன்று (ஜூலை 30) பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.

DIN

வாரத்தின் 2வது வணிக நாளான இன்று (ஜூலை 30) பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.

நேற்றைய முடிவில் இருந்து சரிவுடன் தொடங்கிய வணிகம், பின்னர் படிப்படியாக உயர்ந்தது. சென்செக்ஸ் 81,230 புள்ளிகள் என்ற சரிவைத் தொட்டு இறுதியில் 81,815.27 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99.55 புள்ளிகள் உயர்ந்து, 81,455.40 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.12 சதவீதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.20 புள்ளிகள் உயர்ந்து, 24,857.30 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.085 சதவீதம் உயர்வாகும்.

பங்குச்சந்தை சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன.

டாடாமோட்டாா்ஸ், என்டிபிசி, பவா்கிரிட், பஜாஜ் ஃபின்சா்வ், ஏசியன் பெயிண்ட், டைட்டன் உள்பட 16 நிறுவனங்களின் பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

இதே போன்று ஐடிசி, சன்பாா்மா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், பாா்தி ஏா்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ் உள்பட 14 பங்குகள் வீழ்ச்சிப்பட்டியலில் இருந்தன.

இதேபோன்று நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் 21 நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்துடன் ஆதாயப்பட்டியலிலும், 29 நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT