வணிகம்

டயர் ஏற்றுமதி ரூ.23,073 கோடியாக அதிகரிப்பு!

2024 நிதியாண்டில் டயர் ஏற்றுமதி 12% அதிகரிப்பு.

DIN

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில், டயர் ஏற்றுமதி ரூ.23,073 கோடியாக அதிகரித்துள்ளது என வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில், பொருளாதார மந்தநிலை, அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் டயர் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

நிதியாண்டின் இரண்டாவது பாதியில், இந்தியாவிலிருந்து டயர் ஏற்றுமதி மீண்டும் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது மதிப்பு அடிப்படையில் 12 சதவிகிதமாகும் என்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளை மேற்கோள் காட்டி வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடினமான சூழல் இருந்தபோதிலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் டயர் ஏற்றுமதி எழுச்சி கண்டது. இது சவாலான காலங்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்ததுள்ளது என்றார் வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அர்னாப் பானர்ஜி.

இந்திய டயர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகிய முன்னேறிய சந்தைகள் உள்பட உலகின் 170 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகளவில் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்திய டயர் உற்பத்தியாளர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை இது வழங்கியுள்ளது.

அதே வேளையில், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்திய டயர் தொழில் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT