2023-24 நிதியாண்டில் விற்கப்பட்ட மின்சார வாகன எண்ணிக்கை 17 லட்சம் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 40.31 சதவிகிதம் அதிகமென அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஜேஎம்கே ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விற்பனையான மின்சார வாகனங்களில் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பங்கு 94 சதவிகிதம் எனத் தெரிவித்துள்ளது.
மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை 29 சதவிகிதம் அதிகரித்து 10 லட்சம் வாகனங்கள் இந்தாண்டு விற்பனையாகியுள்ளன.
ஒட்டுமொத்த விற்பனையில் இரு சக்கர வாகனங்கள் 57 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன.
பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் மூன்று சக்கர வாகனத்தின் மீதான மக்கள் ஆர்வம் அதிகமாக உள்ளதை அறிக்கை காட்டுகிறது. இந்த பிரிவில் விற்பனை 56 சதவிகிதம் அதிகரித்து 6,34,969 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
குறைவான செலவு, சரக்கு போக்குவரத்துக்கு அதிகரிக்கும் தேவை மற்றும் வாடிக்கையாளருடன் நேரடி தொடர்பு ஆகிய காரணங்களால் இந்த பிரிவில் அதிக விற்பனை சாத்தியமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கார்களை பொறுத்தவரை இந்த நிதியாண்டில் 99,085 மின்சார கார்கள் விற்பனையாகியுள்ளன. மின்சார பேருந்துகள் விற்பனை 3,708 ஆக உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.