முகப்பு
வணிகம்

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 80 குறைந்தது.

Updated On : 14 ஜூன், 2024 at 4:18 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரன் ரூ. 53,200 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த வாரம் ரூ. 54,000-ஐ தொட்ட தங்கத்தின் விலை, படிப்படியாக குறைந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதல் சிறிது குறைந்தும் அதிகரித்தும் வருகிறது. வியாழக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 53,280-ஆக இருந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 80 குறைந்து, ரூ. 53,200-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.95-க்கும் ஒரு கிலோ ரூ. 95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →