வணிகம்

பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சம்!

பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உச்சம்!

DIN

நிதித்துறை பங்குகளின் உயர்வால் பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தில் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. வங்கித் துறை பங்குகள் குறியீட்டெண் பேங்க் நிப்டி முதல்முறையாக 52,000 புள்ளிகளை தொட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை உள்ளூர் சந்தையில் நிதிசார் பங்குகள் உயர்வு தனியார் வங்கிகளின் பங்குகளில் தொடங்கியது. வரலாறு காணாத உச்சமாக சென்செக்ஸ் 78,000 என்கிற புள்ளியை தொட்டுள்ளது.

சென்செக்ஸ் 712 புள்ளிகள் உயர்வுக்கு 78,053 என்ற நிலையிலும் நிப்டி 183 புள்ளிகள் உயர்வில் 23,721 என்றளவிலும் முடிவடைந்தது.

ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மஹிந்திரா மற்றும் எல்&டி ஆகியவை செக்செக்ஸில் ஆதாயத்தில் முடிவடைந்தன.

சந்தை வல்லுநர்களின் கருத்துப்படி, ரியல் எஸ்டேட், பவர், மெட்டல்ஸ் மற்றும் மிட்கேப் துறைகளிலும் இலாபம் கிடைத்துள்ளது.

வருகிற பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக சந்தை முன்னேற்றத்தை அடைந்துவருவதாகவும் பருவமழை காலமும் சந்தையின் மாற்றங்களுக்கு காரணமாகும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

வங்கி மற்றும் நிதித் துறைகளின் பங்கு வளர்ச்சியால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 0.03 பைசா அதிகரித்து 83.45 என வர்த்தமாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT