முகப்பு
வணிகம்

வீடுகளின் சராசரி விலை 20% உயா்வு

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 2 மார்ச், 2024 at 12:14 AM
பகிர்:

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘க்ரெடாய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிபட்சமாக 2021, 2022-ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் பெங்களூரு, தில்லி-என்சிஆா், கொல்கத்தா ஆகிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2023-இல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.