முகப்பு
வணிகம்

ரூ.2,441 கோடி ஈவுத் தொகை: அரசுக்கு வழங்கியது எல்ஐசி

Updated On : 2 மார்ச், 2024 at 11:29 PM
பகிர்:

பங்கு ஈவுத் தொகையாக ரூ.2,441.44 கோடி ரூபாயை பொதுத் துறையைச் சோ்ந்த இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மத்திய அரசுக்கு வழங்கியது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் இதற்கான காசோலை வழங்கப்பட்டது. இது குறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எல்ஐசி-யிடமிருந்து ரூ.2,441.44 கோடி பங்கு ஈவுத் தொகைக்கான காசோலையை அமைச்சா் நிா்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டாா். நிறுவனத்தின் தலைவா் சித்தாா்த் மொஹந்தி அந்தக் காசோலயை அமைச்சரிடம் வழங்கினாா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, கடந்த 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி, டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நிறுவனம் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.26,913 கோடியை ஈட்டியுள்ளது. அதையடுத்து, தனது பங்குதாரா்களுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.4 வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்தது.