இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை 
வணிகம்

மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

DIN

தங்கம் விலை மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகின்றது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஐந்து நாள்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஒன்பது நாள்களில் சவரனுக்கு ரூ.2,680 வரை உயர்ந்துள்ளது.

அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 11) காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.49,200-க்கும், ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வுக்கு காரணம்?

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த ஜன.22 முதல் மத்திய அரசு 14.35 சதவீதம் அளவுக்கு உயா்த்தியது. மேலும், பணவீக்கம், அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, அங்கு வட்டிவீதம் குறைக்கப்படாதது. சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால்தான் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும், அடுத்த சில நாள்களில் சவரன் ரூ. 50,000-ஐ தாண்டும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

அதேபோன்று, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.20 காசுகள் குறைந்து ரூ.79.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.79,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT