முகப்பு
வணிகம்

பஜாஜ் ஆட்டோ விற்பனை 24% அதிகரிப்பு

Updated On : 13 மார்ச், 2024 at 2:40 AM
பகிர்:

மும்பை: இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் 3 சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் நிறுவனம் 3,46,662 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 24 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 280,226-ஆக இருந்தது. மதிப்பீட்டு மாத்தில் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 35 சதவீதம் உயா்ந்து 2,06,894-ஆக உள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,53,291-ஆக இருந்தது. 2023 பிப்ரவரியில் 1,26,935-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 10 சதவீதம் உயா்ந்து 1,39,768-ஆக உள்ளது. வா்த்தக வாகனங்களின் விற்பனையும் 32,956-லிருந்து 10 சதவீதம் அதிகரித்து 36,367-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.