2026ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்த வாகன விற்பனை 2.83 கோடி: சியாம்
2026 நிதியாண்டில் மொத்த 2,82,65,519 வாகனங்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
புதுதில்லி: இந்தியாவில் மொத்த 2,82,65,519 வாகனங்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது.
2026 நிதியாண்டில், இந்தியாவில் மொத்த 2,82,65,519 வாகனங்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு விட 10.4 சதவீதம் அதிகமாகும். பயணிகள் மற்றும் வணிக வாகனங்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் என அனைத்துப் பிரிவுகளிலும், இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனை பதிவானதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தெரிவித்துள்ளது.
2024-25 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு வாகன விற்பனை 2,56,09,399 வாகனங்களாக இருப்பதாக சியாம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
2025-26 நிதியாண்டு மிதமான தொடக்கத்தையே கொண்டிருந்தாலும், இந்திய வாகனத் துறை இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நிறைவு செய்தது. பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள், மூன்று சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் என அனைத்து பிரிவும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தங்களின் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளதாக சியாம் தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.
2025-26 நிதியாண்டில், பயணிகளின் மொத்த வாகன விற்பனை 46,43,439 வாகனங்களாக இருந்தது. கடந்த ஆண்டு 43,01,848 வாகனங்களுடன் ஒப்பிடும் போது இது 7.9 சதவீதம் அதிகமாகும்.
2026 நிதியாண்டில் இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 2,17,05,974 வாகனங்களாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு 1,96,07,332 வாகனங்களுடன் ஒப்பிடும் போது இது 10.7 சதவீதம் அதிகமாகும். அதே வேளையில், 2025 நிதியாண்டில் விற்பனையான 1,22,52,305 இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடும் போது, 2026ஆம் நிதியாண்டில் இருசக்கர வாகன விற்பனையானது 6.6 சதவீதம் உயர்ந்து 1,30,64,789 வாகனங்களாக உள்ளது.
2025 நிதியாண்டில் விற்பனையான 68,53,214 ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில், 2026 நிதியாண்டில் ஸ்கூட்டர் விற்பனை 18.5 சதவீதம் உயர்ந்து 81,17,945 ஸ்கூட்டர்களாக உள்ளது.
வணிக வாகனங்கள் பிரிவில், கடந்த நிதியாண்டில் விற்பனையான 9,58,679 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், 2026 நிதியாண்டில் 10,79,871 வாகனங்களாக விற்பனையாகி, 12.6 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதே வேளையில் 2025 நிதியாண்டில் விற்பனையான 7,41,420 மூன்று சக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில், 2026 நிதியாண்டில் மூன்று சக்கர வாகன விற்பனை 12.8 சதவீதம் உயர்ந்து 8,36,231 வாகனங்களாக உள்ளது.
2025 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 53,62,884 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், 2026 நிதியாண்டில் மொத்த வாகன ஏற்றுமதி 24 சதவீதம் உயர்ந்து 66,47,685 வாகனங்களாக உள்ளது.
Automobile wholesales in India posted a record at 2,82,65,519 units in FY26, up 10.4 per cent year-on-year with all segments.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.