ஆகஸ்ட் மாதம் மின்சார வாகன விற்பனை 53 சதவீதமாக அதிகரிப்பு!
மொத்த வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் பங்கு கடந்த ஆண்டு இருந்த 9.5 சதவீதத்திலிருந்து 12.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
புதுதில்லி: ஆகஸ்ட் மாதம் மின்சார வாகனங்களின் சில்லறை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 52.9 சதவீதம் அதிகரித்து 2,98,448 வாகனங்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், மொத்த வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் பங்கு கடந்த ஆண்டு இருந்த 9.5 சதவீதத்திலிருந்து 12.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக 'ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ்' தெரிவித்தது.
கடந்த மாதம் மின்சார வாகன விற்பனை வளர்ச்சியில் இருசக்கர வாகனப் பிரிவு முன்னிலை வகித்தது. இந்த பிரிவில் விற்பனை 67.05 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1,09,673 வாகனங்களிலிருந்து 1,83,204 வாகனங்களாக விற்பனை உயர்ந்துள்ளது.
மின்சார பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த மாதம் 30,696 வாகனங்களாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 20,210 வாகனங்களாக இருந்தது.
Advertisement
Advertisement
மூன்று சக்கர வாகன சில்லறை பிரிவில், அதன் விற்பனை 25.28 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 63,736 வாகனங்களிலிருந்து 79,846 வாகனங்களாக உயர்ந்துள்ளது.
ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் தரவுகளின் அடிப்படையில், மின்சார வணிக வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த மாதம் 4,702 வாகனங்களாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,631 வாகனங்களாக இருந்தது. இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பு.
இந்தியாவில் மின்சார வாகனப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதம் இதுவரை இல்லாத அளவுக்குச் சிறந்த மாதமாக அமைந்தது. அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய மின்சார வாகனங்களின் சில்லறை விற்பனை 2,98,448 வாகனங்களை எட்டியது. இதன் மூலம் மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 9.5 சதவீதத்திலிருந்து 12.3 சதவீதமாக உயர்ந்தது. குறிப்பாக, நான்கு சக்கர மின்சார வாகனப் பிரிவுகளுமே ஆகஸ்ட் மாதத்திற்கான விற்பனையில் சாதனையைப் படைத்துள்ளது.
வணிக வாகனங்களைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதம் மிகச் சிறந்த மாதமாக அமைந்தது. இப்பிரிவில் விற்பனை 4,702 வாகனத்தை எட்டி, மாத அடிப்படையில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. அதே வேளையில், மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலம் அல்லாத, விற்பனை மந்தமாக இருக்கக்கூடிய மாதத்திலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை ஊடுருவலைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மொத்த மின்சார வாகன சில்லறை விற்பனையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள நிலையில், மின்சார மூன்று சக்கர வாகனங்கள் 65.3 சதவீதப் பங்களிப்புடன் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது. அதே வேளையில், பயணிகள் மின்சார வாகனங்களின் விற்பனை 52 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Electric vehicle retail sales in August grew 52.9 per cent year-on-year to 2,98,448 vehicles.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.