முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்

புதிய உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

Updated On : 13 மார்ச், 2024 at 5:23 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 320 குறைந்து ரூ. 48,880-க்கு புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து, தங்கம் விலை அதிகரித்து கடந்த 9-ஆம் தேதி புதிய உச்சமாக ரூ.49,200-ஐ தொட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஒரு கிராம் ரூ.6,150-க்கு விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாள்களாக தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.48,880-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 6,110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.78.50-க்கும், கிலோவுக்கு ரூ. 1,000 குறைந்து ரூ. 78,500-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →