முகப்பு
வணிகம்

டொயோட்டா விற்பனை புதிய உச்சம்

Updated On : 20 மார்ச், 2024 at 2:19 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:25 PM

புது தில்லி, மாா்ச் 19: இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் 25,220 காா்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. இது, நிறுவனத்தின் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர விற்பனை. 2023 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 15,685-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த பிப்ரவரியில் நிறுவன காா்களின் மொத்த விற்பனை 61 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 23,300-ஆகவும், ஏற்றுமதி 1,920-ஆகவும் உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement