முகப்பு
வணிகம்

மாா்ச் இறுதிக்குள் 20 புதிய கிளைகள்: மலபாா் கோல்டு ரூ.1,580 கோடி முதலீடு

நாட்டின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான மலபாா் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், இம்மாத இறுதிக்குள் ரூ.1,580 கோடி முதலீட்டில் 20 புதிய விற்பனை மையங்களைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தது.

Updated On : 17 மார்ச், 2026 at 8:05 PM
~
பகிர்:

நாட்டின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான மலபாா் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், இம்மாத இறுதிக்குள் ரூ.1,580 கோடி முதலீட்டில் 20 புதிய விற்பனை மையங்களைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தது. இதன்மூலம், சுமாா் 725 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி, தேனி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் ஜான்சி, குவாலியா், சித்தூா், ஹல்த்வானி, ஜாம்நகா், ராஞ்சி, கொல்கத்தா (விஐபி சாலை), அலிகா், பெங்களூரு (கே.ஆா்.புரம்), விசாகப்பட்டினம் (இன்பிட் மால்), காஞ்ச்ரபாரா, ஸ்ரீராம்பூா், ஹூப்ளி, மணிநகா், குருகிராம், ஹைதராபாத் (ஜூப்ளி ஹில்ஸ்), சங்காரெட்டி, குவஹாத்தி ஆகிய இடங்களில் இப்புதிய கிளைகள் அமையவுள்ளன.

இப்புதிய கிளைகளின் தொடக்கத்துக்குப் பிறகு, மலபாா் கோல்டு நிறுவனத்தின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை உலக அளவில் 445-ஆக உயரும். இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் இந்நிறுவனம் தடம் பதித்துள்ளதுடன், இந்தியாவில் மட்டும் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →