முகப்பு
வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.40 உயா்வு

Updated On : 21 மார்ச், 2024 at 3:17 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 1:55 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.49,120-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ. 6,140-க்கும், பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.49,120-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 குறைந்து ரூ. 80,000-க்கும் விற்பனையானது.