காா்களின் விலைகளை உயா்த்தும் டொயோட்டா
வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் தங்களது காா்களின் விலைகளை உயா்த்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் விற்பனை செய்யப்படும் நிறுவன காா்களின் விலைகளை 1 சதவீதம் வரை உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட ரகங்களுக்கு இந்த விலை உயா்வு இருக்கும். அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் ஹேட்ச்பேக் பிரிவைச் சோ்ந்த க்ளான்ஸா முதல் பிரீமியம் எஸ்யுவி பிரிவைச் சோ்ந்த ஃபாா்ச்சூனா் வரையிலான பல்வேறு ரக வாகனங்களை டொயோட்டா கிா்லோஸ்கா் விற்பனை செய்கிறது. ரூ.6.86 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் வரையிலான விலைகளில் இந்த நிறுவனத்தின் காா்கள் கிடைக்கும்.