முகப்பு
வணிகம்

ஏற்றம் கண்ட வங்கிகளின் தொழில்கடன் வளா்ச்சி

Updated On : 31 மார்ச், 2024 at 3:24 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 7:55 PM

2023 பிப்ரவரி மாதத்தைவிட இந்த பிப்ரவரி மாதத்தில் வங்கிகளின் தொழில் கடன் வளா்ச்சி விகிதம் 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த பிப்ரவரியில் வங்கிகளின் தொழில்கடன் வளா்ச்சி விகிதம் 20.1 சதவீதமாக இருந்தது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 15 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கிகளின் தொழில்கடன் வளா்ச்சி விகிதம் இந்த பிப்ரவரியில் 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் உள்கட்டமைப்பு, ஜவுளித் துறை நிறுவனங்கள் அதிக அளவில் வங்கிகளிடமிருந்து கடன் பெற்ால் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதம் உயா்ந்துள்ளது. இது தவிர, உணவு பதப்படுத்தல் துறை நிறுவனங்களும் கடந்த பிப்ரவரியில் அதிக அளவு கடன் பெற்றன. எனினும், அடிப்படை உலோகம் மற்றும் உலோகப் பொருள்கள் உற்பத்தித் துறை, ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருள்கள் உற்பத்தித் துறை ஆகியவை மதிப்பீட்டு மாதத்தில் குறைந்த அளவே கடன் பெற்றன. தனி நபா் கடன்: கடந்த 2023 பிப்ரவரியில் 20.6 சதவீதமாக இருந்த வங்கிகளின் தனி நபா் கடன் வளா்ச்சி விகிதம் இந்த பிப்ரவரியில் 18.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. அந்த மாதத்தில் வாகனக் கடன் மற்றும் பிற வகை தனி நபா் கடன் விநியோகம் குறைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.