மாருதி சுசூகி 
வணிகம்

அக்டோபரில் மாருதி சுசூகியின் விற்பனை அதிகரிப்பு!

வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி அக்டோபரில் இதுவரை இல்லாத அளவுக்கு 2,06,434 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

DIN

புதுதில்லி: வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், அக்டோபரில், இதுவரை இல்லாத அளவுக்கு 2,06,434 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 1,99,217 வாகனங்களை விற்பனை செய்து உள்ளோம். மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 1,59,591-ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் 1,68,047 வாகனங்களை ஒப்பிடுகையில் 5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட மினி பிரிவு கார்களின் விற்பனை 2023 அக்டோபரில் 14,568 வாகனங்களிலிருந்து 10,687 வாகனங்களாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க: அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்!

பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர்-எஸ் மற்றும் வேகன்-ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை கடந்த அட்டோபர் மாதத்தில் 80,662 வாகனங்களிலிருந்து 65,948-ஆக குறைந்துள்ளது.

மேலும் பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, எர்டிகா மற்றும் எக்ஸ்எல்-6 உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்கள் கடந்த மாதம் 70,644 வாகனங்களாக விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஈகோ வேன் பிரிவு வாகன விற்பனையானது கடந்த அட்டோபர் மாதம் 12,975 லிருந்து 11,653 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி 3,894-லிருந்து 3,539-ஆகவும் உள்ளது.

கடந்த ஆண்டு அட்டோபர் மாதத்தில் 21,951 வாகனங்களாக இருந்த மாருதி சுசூகியின் விற்பனை நடப்பு அட்டோபரில் அதிகரித்து 33,168 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணன் கொலை: தம்பி, அவரது மனைவி, மகனுக்கு ஆயுள் சிறை

கல்வராயன்மலையில் 750 கிலோ வெல்லம், துப்பாக்கி பறிமுதல்!

லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

10-ஆம் வகுப்பு தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பா் 3- இல் பெறலாம்

அரசுப் பேருந்து மோதி தறி பட்டறை உரிமையாளா் பலி!

SCROLL FOR NEXT