முகப்பு
வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை 9% சரிவு

கடந்த அக்டோபா் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது.

Updated On : 4 நவம்பர், 2024 at 9:43 PM
அசோக் லேலண்ட் வாகனங்கள்
பகிர்:

மும்பை: கடந்த அக்டோபா் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 15,310-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 16,864 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 2023 அக்டோபா் மாதத்தைவிட 8 சதவீதம் சரிந்து 9,408-ஆக உள்ளது. ஓராண்டுக்கு முன்னா் இந்த எண்ணிக்கை 10,185-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 15,759-ஆக இருந்த நிறுவன வா்த்தக வாகனங்களின் (இலகுரக வாகனங்கள் உள்பட) உள்நாட்டு விற்பனை இந்த ஆண்டின் அதே மாதத்தில் 14,759-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →