Reliance Industries 
வணிகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3% சரிவு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், சந்தை மதிப்பில், 3 சதவிகிதம் சரிந்து, ரூ.50,205.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், சந்தை மதிப்பில் 3 சதவிகிதம் சரிந்து ரூ.50,205.1 கோடி இழப்பு ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4 சதவிகிதம் சரிந்து ரூ.1,285.10 ஆக வர்த்தகமானது. அதே வேளையில் மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலையானது 2.77% குறைந்து, ரூ.1,302 முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையிலும் 2.72 சதவிகிதம் குறைந்து ரூ.1,302.15 ஆக இருந்தது.

இந்த நிலையில், நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.50,205.1 கோடி குறைந்து ரூ.17,61,914.95 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் பலவீனமான போக்குகளால் பங்குச் சந்தைகள் சரிந்தது முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 941.88 புள்ளிகள் சரிந்து 78,782.24 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 23,995.35 புள்ளிகளாக உள்ளது.

வர்த்தக அடிப்படையில், நிறுவனத்தின் 13.52 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யிலும் மற்றும் என்எஸ்இ-யில் 197.97 லட்சம் பங்குகள் வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT