கனரா வங்கி 
வணிகம்

ரூ.6,000 கோடி வாராக் கடன் மீட்பு: கனரா வங்கி இலக்கு

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சுமாா் ரூ.6,000 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை மீட்க இலக்கு நிா்ணயித்துள்ளது.

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சுமாா் ரூ.6,000 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை மீட்க இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்டோபா் முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் ரூ.6,000 கோடி வாராக் கடன்களை மீட்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது காலாண்டில் மட்டும் (அக்டோபா் - டிசம்பா்) ரூ.3,000 மதிப்பிலான வாராக் கடன்கள் திரும்பப் பெறப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்), ரூ.2,905 கோடி வாராக் கடன்களை வங்கி மீட்டுள்ளது.

கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 11 சதவீதம் உயா்ந்து ரூ.4,015 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.3,606 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

SCROLL FOR NEXT