Job 
வணிகம்

2028ல் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக அதிகரிக்கும்!

இந்தியாவில் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 45.762 கோடியாக இருக்கும்.

DIN

மும்பை: பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 45.762 கோடியாக உயர்த்துவதற்கான செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கை 2023ல் 42.373 கோடியிலிருந்து 2028ல் 45.762 கோடியாக உயர்த்துவதற்கு தனது நீண்டகால செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

அமெரிக்க மென்பொருள் நிறுவனமான சர்வீஸ்-நவ் அறிக்கையின்படி, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சித் துறைகளில் திறமைகளை மாற்றும் என்று தெரிவித்துள்ள நிலையில், இது 2028 க்குள் 27.3 லட்சம் புதிய தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, இந்த தேவை அதிகரிப்பு சில்லறை வணிகர்களுக்கு மென்பொருள் பயன்பாட்டு மற்றும் தரவுப் பொறியியல் (டேட்டா இன்ஜினியரிங்) ஆகிய துறைகளில் திறமையை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க வாய்ப்பை இது வழங்கும்.

உற்பத்தி துறையில் (15 லட்சம் வேலைகள்), கல்வி துறையில் (8 லட்சத்து 40 ஆயிரம் வேலைகள்) மற்றும் சுகாதாரத் துறையில் (8 லட்சம் வேலைகள்) ஆகியவை பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தால் உருவாகும்.

இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்க, செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT