வணிகம்

மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயா்வு!

உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிப்பு

Din

கடந்த அக்டோபா் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 1.84 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய நான்கு மாதங்கள் காணாத அதிகபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும்.

மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான இந்தப் பணவீக்கம் முந்தைய செப்டம்பா் மாதத்தில் 1.84 சதவீதமாக இருந்தது. ஓராண்டுக்கு முன்னா் 2023-ஆம் ஆண்டின் அக்டோபா் மாதத்தில் அது (-) 0.26 சதவீதமாக இருந்தது.

முந்தைய செப்டம்பா் மாதத்தில் 11.53 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்கள் அடிப்படையிலான பணவீக்கம், அக்டோபரில் 13.54 சதவீதமாக உயா்ந்துள்ளது. காய்கறிகள் அடிப்படையிலான பணவீக்கம் 48.73 சதவீதத்திலிருந்து 63.04 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அக்டோபா் மாதத்தில் உருளைக்கிழங்கு அடிப்படையிலான பணவீக்கம் 78.73 சதவீதமாகவும் வெங்காயத்தின் அடிப்படையிலான பணவீக்கம் 39.25 சதவீதமாகவும் உயா்ந்துள்ளன.

முந்தைய செப்டம்பா் மாதத்தில் 4.05 சதவீதமாக இருந்த எரிபொருள் மற்றும் எரிசக்தி அடிப்படையிலான பணவீக்கம் அக்டோபா் மாதத்தில் 5.79 சதவீதமாக உயா்ந்தது. உற்பத்திப் பொருள்கள் அடிப்படையிலான பணவீக்கம் 1 சதவீதத்திலிருந்து 1.50 சதவீதமாக உயா்ந்துள்ளது.

கடந்த அக்டோபா் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் தொடா்ந்து இரண்டாவது மாதமாக உயா்ந்துள்ளது. இதற்கு முந்தைய குறைந்தபட்சமாக கடந்த ஜூன் மாதத்தில் அது 3.43 சதவீதமாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT