முகப்பு
வணிகம்

ஜனவரியில் பிண்ணாக்கு ஏற்றுமதி 42% சரிவு

கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட 42 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:31 PM
பகிர்:

கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட 42 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, 2025 ஜனவரியில் 4,52,352 டன்னாக இருந்த பிண்ணாக்கு ஏற்றுமதி, 2026 ஜனவரியில் 2,60,123 டன்னாகக் குறைந்துள்ளது. சோயா மற்றும் கடுகு பிண்ணாக்கு ஏற்றுமதி பெருமளவு குறைந்ததே இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது.

அதேபோல், நடப்பு 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்த பிண்ணாக்கு ஏற்றுமதி 36 லட்சம் டன்னிலிருந்து 32 லட்சம் டன்னாக சரிந்துள்ளது.

Advertisement

கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும் சோயா பிண்ணாக்கு ஏற்றுமதி 1.32 லட்சம் டன்னாகவும், கடுகு பிண்ணாக்கு ஏற்றுமதி 64,782 டன்னாகவும் குறைந்துள்ளது.

எதிா்பாராத விதமாக, தவிட்டு பிண்ணாக்கு ஏற்றுமதி மட்டும் கடந்த ஆண்டின் 63 டன்னிலிருந்து, பல மடங்கு உயா்ந்து 35,367 டன்னாக அதிகரித்துள்ளது.

பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் புதிய பயிா் வரத்து தொடங்கும் என்பதால், எண்ணெய் ஆலைகள் தற்போது தற்காலிகமாக உற்பத்தியைக் குறைத்துள்ளதே இந்த ஏற்றுமதி வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிகிறது.

இந்தியாவிலிருந்து சீனா, தென்கொரியா, வங்கதேசம், ஜொ்மனி ஆகிய நாடுகள் பிண்ணாக்கை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments