அதானி குழும பங்குகள் 
வணிகம்

உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

திங்கள்கிழமை காலை உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

DIN

புது தில்லி: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வணிகத்தின்போது அதானி குழுமத்தைச் சேர்ந்து ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

அதானி எனர்ஜி சொல்யூஷன் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 7 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது.

மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் 6.42 சதவீதமும், அதானி டோட்டல் காஸ் நிறுவனப் பங்குகள் 5.33 சதவீதமும், அதானி துறைமுகப் பங்குகள் 4.64 சதவீதமும், அதானி பவர் நிறுவனப் பங்குகள் 4.17 சதவீதமும் உயர்வை சந்தித்துள்ளன.

அதானி என்டர்பிரைசஸ் 4 சதவீதமும், அதானி வில்மர் 3.23 சதவீதமும், ஏசிசி 3 சதவீதமும், அம்புஜா சிமெண்ட் பங்குகள் 2.71 சதவீதமும் உயர்வுடன் வர்த்தகமாகின.

அமெரிக்காவில், கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் சரிவைக் கண்டன.

இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அதானி குழுமம் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து கடும் சரிவிலிருந்து மெல்ல மீண்டு வர்த்தகம் நிறைவு பெற்றது.

இதன் தாக்கம் இன்று பங்குச் சந்தையில் எதிரொலிக்கவில்லை. தொடர்ந்து அதானி குழும பங்குகள் இன்று உயர்வுடன் வணிகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

SCROLL FOR NEXT