முகப்பு
வணிகம்

தங்கம் விலை 2-வது நாளாக அதிரடி குறைவு!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

Updated On : 26 நவம்பர், 2024 at 4:26 AM
தங்கம் விலைஉயர்வு
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 58,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்து ரூ. 57,600-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 960 அதிரடியாக குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சவரன் ரூ. 56,640, ஒரு கிராம் ரூ. 7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலையும் 7 நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ரூ. 3 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 98க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கு விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →