தங்கம் விலை! 
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கம், வெள்ளி விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வரும் நிலையில், புதன்கிழமை மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 5,200 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. ஒரு கிராம் ரூ. 15,610-க்கும், ஒரு சவரன் ரூ. 1,24,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை பேரதிர்ச்சி அளிக்கும் வகையில், தங்கம் சவரனுக்கு ரூ. 9,520 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 16,200-க்கும், ஒரு சவரன் ரூ. 1,34,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 14,720 அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே வெள்ளியின் விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ. 13 உயர்ந்த நிலையில், இன்று ரூ. 25 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 425 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 4.25 லட்சமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Gold price has increased dramatically by Rs. 9,520 per sovereign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

SCROLL FOR NEXT