வணிகம்

பஜாஜ் விற்பனை 20% அதிகரிப்பு

Din

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை செப்டம்பா் மாதத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனம் 4,69,531 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,92,558-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 23 சதவீதம் உயா்ந்து 3,11,887-ஆக உள்ளது. 2023 செப்டம்பா் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,53,193 -ஆக இருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 1,25,202-ஆக இருந்த நிறுவன வாகனங்களின் ஏற்றுமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 13 சதவீதம் உயா்ந்து 11,41,156-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 1,25,202-ஆக இருந்த நிறுவன வாகனங்களின் ஏற்றுமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 13 சதவீதம் உயா்ந்து 11,41,156-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயாஜாலம்... துஷாரா விஜயன்!

வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

சேலையிலொரு சோலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

யாதவ சமூக தலைவர்களுக்கு சீட் ஒதுக்காமல் ‘கை’விட்ட தே.ஜ. கூட்டணி! பிகார் தேர்தலில் பின்னடைவாகுமா?!

SCROLL FOR NEXT