முகப்பு
வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

கடந்த செப்டம்பா் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 10 சதவீதம் சரிந்துள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 2:46 AM
பகிர்:

மும்பை: கடந்த செப்டம்பா் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 10 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 17,233-ஆக பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 19,202 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 2023 செப்டம்பா் மாதத்தைவிட 13 சதவீதம் சரிந்து 11,077-ஆக உள்ளது. ஓராண்டுக்கு முன்னா் இந்த எண்ணிக்கை 12,752-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 6,450-ஆக இருந்த நிறுவன இலகுரக வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை இந்த ஆண்டின் அதே மாதத்தில் 6,156-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →