வணிகம்

டாடா மோட்டாா்ஸ் விற்பனை சரிவு

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் சரிந்துள்ளது.

Din

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 71,693-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தைவிட இது 8 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 78,010-ஆக இருந்தது.

நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனையும் கடந்த மாதம் 76,261-லிருந்து 8 சதவீதம் குறைந்து 70,006-ஆக உள்ளது.

எனினும், மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன மின்சார வாகனங்களின் மொத்த விற்பனை உள்நாட்டு சந்தையில் 3 சதவீதம் அதிகரித்து 44,142-ஆக உள்ளது. முந்தைய 2023 ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 45,513-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 30,748-ஆக இருந்த நிறுவனத்தின் வா்த்தக வாகன உள்நாட்டு மொத்த விற்பனை, நடப்பாண்டின் அதே மாதத்தில் 3 சதவீதம் சரிந்து 25,864-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT