பெட்ரோநெட் எல்என்ஜி பங்குகள் 9% சரிவு!
எரிவாயு இறக்குமதியாளரான பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 9 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.
புதுதில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணத்தால், இந்திய பங்குச் சந்தை சரிவை எதிர்நோக்கி வருகிறது.
கத்தார் எல்என்ஜி உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியதால், எரிவாயு இறக்குமதியாளரான பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 9 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.
பிஎஸ்இ-யில் பெட்ரோநெட் எல்என்ஜி பங்கு 9.27 சதவீதம் சரிந்து ரூ.280.50 ஆக முடிந்தன.
Advertisement
Advertisement
என்எஸ்இ-யில், நிறுவனத்தின் பங்குகள் 9.28 சதவீதம் சரிந்து ரூ.280 ஆக முடிவடைந்தன.
தனது எரிவாயு தேவைகளில் கணிசமான பங்கிற்கு கத்தாருடன் நீண்டகால எல்என்ஜி ஒப்பந்தங்களைச் சார்ந்திருக்கும் இந்தியா, சரக்குகளின் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் தொழில்துறை நுகர்வோர் மற்றும் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கான விநியோகம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
Shares of gas importer Petronet LNG Ltd on Wednesday dived over 9 per cent as Qatar halted liquefied natural gas production after its facilities came under attack amid the ongoing West Asia conflict.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.