பட்டியலிட்ட நாளில் அட்ரோயிட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 85% உயர்வு!
அட்ரோயிட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள், முதல் நாள் வர்த்தகத்தில், வெளியீட்டு விலையான பங்கு ஒன்றுக்கு ரூ. 134 ஐ விட 85 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
புதுதில்லி: அட்ரோயிட் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், இன்று பட்டியலிட்ட நிலையில், அதன் முதல் நாள் வர்த்தகத்தில், வெளியீட்டு விலையான பங்கு ஒன்றுக்கு ரூ. 134 ஐ விட 85 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை பங்குச் சந்தையில், இந்த பங்கு ஐபிஓ விலையை விட 86.56 சதவீத கூடுதல் விலையுடன் ரூ. 250-க்கு பட்டியலிடப்பட்டது. வர்த்தக முடிவில், இந்த பங்கு 85.34 சதவீதம் உயர்ந்து ரூ. 248.35 ஆக முடிவடைந்தது.
நிஃப்டி-யில் இந்த பங்கு ரூ. 235 க்கு வர்த்தகத்தைத் தொடங்கி, 75.37 சதவீதம் உயர்ந்தது, இறுதியில் இது வெளியீட்டு விலையை விட 85.36 சதவீதம் உயர்ந்து ரூ. 248.39 ஆக முடிவடைந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1,112.82 கோடியாக உள்ளது.
Advertisement
Advertisement
அட்ரோயிட் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெட், தனது ஐபிஓ விலை வரம்பை, பங்கு ஒன்றுக்கு ரூ. 126 முதல் ரூ. 134 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Shares of Adroit Industries on Wednesday ended over 85 per cent higher in their debut trade.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.