FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விஷால் மெகா மார்ட் நிறுவன பங்குகள் 11% உயர்வு!

இன்றைய வர்த்தகத்தில், விஷால் மெகா மார்ட் பங்குகள் 11.57% வரை உயர்ந்து ரூ. 115.40 ஆக வர்த்தகமானது.

49 வினாடிகள் முன்பு
Vishal Mega Mart - விஷால் மெகா மார்ட்
பகிர்:

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், விஷால் மெகா மார்ட் நிறுவனத்தின் பங்குகள் 11.57% வரை உயர்ந்து, ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக நிஃப்டி-யில் ரூ. 115.40 ஆக வர்த்தகமானது.

செப்டம்பர் 1, 2026 முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு குணேந்தர் கபூரை மீண்டும் நியமிப்பதாகவும், அவரை நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என நியமனம் செய்வதாகவும் கடந்த வாரம் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் ஏற்றம் கண்டது. இறுதியில் நிஃப்டி-யில் இந்த பங்கு 9.74% உயர்ந்து ரூ. 113.50 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

ஹைப்பர்மார்க்கெட் சங்கிலி நிறுவனமான விஷால் மெகா மார்ட், நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிதி முடிவுகளை ஜூலை 23, 2026 அன்று வெளியிட்டது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 206.1 கோடியாக இருந்த ஒருங்கிணைந்த நிகர லாபம், ஆய்வுக்கு உட்பட்ட காலாண்டில் 25.6% அதிகரித்து ரூ. 258.8 கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

summary

Vishal Mega Mart jumped as much as 11.57% to hit the day's high of ₹115.40 apiece on NSE.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments