FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அறிமுக வர்த்தகத்தில் 10% உயர்வுடன் நிறைவு செய்த தீபா ஜூவல்லர்ஸ்!

தீபா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய அறிமுக வர்த்தகத்தில், அதன் வெளியீட்டு விலையான ரூ. 177 ஐ விட கிட்டத்தட்ட 10% கூடுதல் விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

8 செப்டம்பர் 2026, 8:28 pm IST
Deepa Jewellers
பகிர்:

புதுதில்லி: தீபா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய அறிமுக வர்த்தகத்தில், அதன் வெளியீட்டு விலையான ரூ. 177 ஐ விட கிட்டத்தட்ட 10 சதவீதம் கூடுதல் விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மும்பை பங்குச் சந்தையில், அதன் வெளியீட்டு விலையை விட 24.88 சதவீதம் அதிகரித்து, இந்த பங்கு ரூ. 221.05 க்கு வர்த்தகத்தைத் தொடங்கி, இறுதியில் 9.77 சதவீதம் உயர்ந்து ரூ. 194.30 ஆக நிறைவடைந்தது.

நிஃப்டி-யில், இந்த பங்கு 24.85 சதவீதம் உயர்ந்து ரூ. 221 க்கு பட்டியலிடப்பட்டது. பிறகான வர்த்கத்தில், இந்த பங்கு 9.81 சதவீதம் உயர்ந்து ரூ. 194.37 ஆக நிறைவடைந்தது. இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1,867.70 கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

பல்வேறு முதலீட்டாளர் பிரிவினரிடமிருந்தும், குறிப்பாக நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்தும் கிடைத்த வலுவான வரவேற்பால், தீபா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு விண்ணப்பங்கள் இறுதி நாளான வியாழக்கிழமையன்று கிட்டத்தட்ட 43 மடங்கு அதிக சந்தா வசூலிக்கப்பட்டது.

ரூ. 460 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ-வின் விலை வரம்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 168 முதல் ரூ. 177 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

summary

Shares of Deepa Jewellers Ltd on Tuesday ended with a premium of nearly 10 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments