டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிறைவு!
இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் அதன் மதிப்பை இழந்து 3 காசுகள் சரிந்து, வர்த்தக முடிவில் ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.
மும்பை: இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலரின் மதிப்பு வலுவடைந்ததாலும், உள்நாட்டுச் சந்தைகள் பலவீனமாக இருந்ததாலும், தொடக்க வர்த்தகத்தில் ரூபாய் அதன் மதிப்பை இழந்து 3 காசுகள் சரிந்து, வர்த்தக முடிவில் ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை மற்றும் ஈரான் மீதான புதிய அமெரிக்கத் தடைகள் உள்ளிட்டவையால், ரூபாய் - டாலர் வர்த்தகம் குறுகியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.65 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 95.64 என்ற நிலையிலும் பிறகான வர்த்தகத்தில், குறைந்தபட்சமாக ரூ. 95.75 என்ற நிலையில் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவை விட 3 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக இருந்தது.
The rupee pared initial gains and settled for the day lower by 3 paise at 95.74.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.