1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!
எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
புதுதில்லி: எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கு 1.27 சதவீதம் உயர்ந்து ரூ. 717 ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இந்த பங்கு 3.14 சதவீதம் உயர்ந்து ரூ. 730.30 ஐ எட்டியது.
நிஃப்டி-யில் இந்த பங்கு 1.17 சதவீதம் உயர்ந்து ரூ. 716.55 ஆக நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது, இந்த பங்கு 3.17 சதவீதம் உயர்ந்து ரூ. 730.75 ஐ எட்டியது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 14,782.66 கோடி அதிகரித்து ரூ. 11,05,196.64 கோடியாக உயர்ந்தது.
வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி மாற்றம் தொடர்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் ஏற்றம் கண்டதாக பிஎல் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் வர்த்தகப் பிரிவுத் தலைவரான விக்ரம் தெரிவித்தார்.
Shares of HDFC Bank ended over 1 per cent higher on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.