FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்!

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கவுள்ளது குறித்து...

15 செப்டம்பர் 2026, 8:02 pm IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செப். 16, 17 தேதிகளில் தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் செப்.17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கல் இயங்கும் என தெற்கு ரயில்வே இன்று (செப். 15) அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தாம்பரத்திலிருந்து செப்.16 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு சிறப்பு ரயில் (06159) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும்.

மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து செப்.17 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு சிறப்பு ரயில் (06160) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

summary

In connection with the consecration ceremony of the Meenakshi Amman Temple, an unreserved special MEMU train will be operated between Tambaram and Madurai on September 16 and 17.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments