FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்! ஐடி, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை - ANI
பகிர்:

இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கினாலும் உயர்ந்து முடிந்தன. தொடர்ந்து இன்று (அக். 27) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,484.38 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.30 மணி நிலவரப்படி 224.40 புள்ளிகள் சரிந்து 73,382.35 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58.20 புள்ளிகள் குறைந்து 22,695.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

துறைவாரியாக, நிஃப்டி ஐடி, எண்ணெய் & எரிவாயு குறியீடுகள் முறையே 1.6 சதவீதம், 0.8 சதவீதம் சரிந்து, அதிக சரிவைச் சந்தித்தன. தொடர்ந்து நிஃப்டி நுகர்வோர் பொருள்கள் மற்றும் தனியார் வங்கி குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன.

மறுபுறம் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.07 சதவீதம் உயர்ந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1 சதவீதம் வளர்ச்சி கண்டது.

summary

Stock Market: Sensex falls 192 pts to trade lower, Nifty at 22,723; IT leads sectoral loss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments