4 நாள்கள் வீழ்ச்சிக்குப் பிறகு உயர்ந்து முடிந்த பங்குச்சந்தை! மெட்டல், பார்மா பங்குகள் லாபம்!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 26, திங்கள்) உயர்வுடன் முடிந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,990.04 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி இருந்து வந்தது.
எனினும் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 482.92 புள்ளிகள் (0.662%) உயர்ந்து 73,606.75 என்ற புள்ளிகளில் நிலை பெற்றது.
Advertisement
Advertisement
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153.20 புள்ளிகள் (0.68%) உயர்ந்து 22,753.20 புள்ளிகளில் முடிந்தது.
துறைவாரியாக, நிஃப்டி மெட்டல், பார்மா ஆகியவை தலா கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து, அதிக லாபம் ஈட்டின. நிஃப்டி ஹெல்த்கேர் துறையும் லாபம் ஈட்டியது.
அதேநேரத்தில் நிஃப்டி மீடியா, கன்ஸ்யூமர் டூரபிள்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் 1.19 சதவீதம் உயர்ந்து நிறைவடைந்தது, அதே நேரத்தில் நிஃப்டி ஸ்மால்கேப் 1.38 சதவீதம் லாபம் ஈட்டியது.
நிஃப்டி 50 பங்குகளில் 37 பங்குகள் லாபத்துடன் நிறைவடைந்தன. அதிக லாபம் ஈட்டிய பங்குகளில் டாக்டர் ரெட்டிஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், பிஎஸ்இ, அதானி போர்ட்ஸ் ஆகியவை அடங்கும். மறுபுறம், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா கன்ஸ்யூமர், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை அதிக நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்களாக இருந்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில்அதானி போர்ட்ஸ், எடர்னல், கோடக் மஹிந்திரா வங்கி, ட்ரெண்ட், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், இன்டர்குளோப் ஏவியேஷன், ஐடிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக இருந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, மாருதி, ஹெச்சிஎல் டெக், பவர் கிரிட் ஆகிய பங்குகள் சரிவைச் சந்தித்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.22 டாலராக முடிந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் இதுவரை இல்லாத அளவுக்கு 114.8 டாலராக உள்ளது.
Stock Market Close: Sensex ends 483 points higher, Nifty at 23,753; metal shares shine
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.