FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு; ரூ. 10 லட்சம் கோடி இழப்பு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

8 அக்டோபர் 2026, 4:00 pm IST
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி... - ANI
பகிர்:

இந்த வாரத்தில் முதல் 2 நாள்கள் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்த நிலையில் நேற்று (அக். 7) பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.

தொடர்ந்து இன்றும் (அக். 8) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் முடிந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,668.00 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிந்தது. பிற்பகலில் கடும் வீழ்ச்சியடைந்து வர்த்தக நேர முடிவில் 1,045.46 புள்ளிகள் சரிந்து 71,593.24 புள்ளிகளில் நிலை பெற்றது.

Advertisement

Advertisement

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 371.25 புள்ளிகள் சரிந்து 22,231.80 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

நிஃப்டி50-ல் அதானி எண்டர்பிரைசஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 2.53 சதவீதம், 2.34 சதவீதம் சரிந்தன.

துறை வாரியாக, நிஃப்டி ஐடி பங்குகள் காலையில் உயர்ந்தன. ஆனால் வர்த்தக நேர முடிவில் அனைத்து துறைகளும் சரிவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, இன்போசிஸ் ஆகிய 3 பங்குகள் மட்டும் உயர்ந்தும் மற்ற பங்குகள் சரிந்தும் முடிந்தன.

இன்று மட்டும் ரூ. 10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.78 டாலராக முடிந்தது.

பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 104 டாலராக உயர்ந்துள்ளது.

காரணங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி வங்கி கடங்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தியது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, வெளிநாட்டுப் பங்குகள் வெளியேற்றம், உலக பொருளாதாரம் உள்ளிட்டவையும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகின்றன.

summary

Stock Market Close: Sensex tanks 1,053 pts, Nifty ends at 22,232

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments