FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு! ஆட்டோ பங்குகள் மட்டும் லாபம்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை - ANI
பகிர்:

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்த நிலையில் நேற்று மாற்றமின்றி நிறைவடைந்தது.

தொடர்ந்து இன்று (அக். 28) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,253.44 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 648.96 புள்ளிகள் சரிந்து 72,949.71 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது.

Advertisement

Advertisement

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148.35 புள்ளிகள் குறைந்து 22,601.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி, நுகர்வோர் பொருள்கள் மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன. மாறாக, நிஃப்டி ஆட்டோ மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகும்ன ஒரே துறையாக உள்ளது.

நிஃப்டி மிட்கேப் 0.41 சதவீதம் சரிந்தும், நிஃப்டி ஸ்மால்கேப் 0.6 சதவீதம் உயர்ந்தும் வர்த்தகமாயின.

சென்செக்ஸ் 30 பங்குகளில் எல்&டி, எஸ்பிஐ இன், ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தும் மற்ற பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.12 ஆகத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது, வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்திய பங்குச் சந்தைகளில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் இன்று பட்டியலிடப்பட்டுள்ளன. 21 சதவீத பிரீமியத்தில் இந்த பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

summary

Stock Market Crash: Sensex plunges over 900 points, Nifty50 slips 1 percent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments